• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

ஒலிம்பிக் போட்டிவரலாற்றிலேயே அதிகபட்சமாக 19 பதக்கங்களை பெற்று புதிய வரலாறு படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ், நேற்று 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் மற்றொரு தங்கப்பதக்கம் பெற்று தனது சாதனையை மேலும் வலுவாக்கி விட்டார்.

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ். சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ள இவர், லண்டன் ஒலிம்பிக் போட்டியிலும் தனது சாதனைகளைத் தொடர்கிறார். இது அவருக்கு 3வது ஒலிம்பிக் போட்டியாகும். இதற்கு முன்பு 2 போட்டிகளில் அவர் 17 பதக்கங்களைப் பெற்றிருந்தார். தற்போதைய லண்டன் போட்டியில் மேலும் 3 பதக்கங்களை வென்று புதிய ஒலிம்பிக் சாதனை படைத்து விட்டார்.

ரஷ்யாவை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான லெட்டினா, அதிகபட்சமாக 9 தங்கம் உட்பட 18 பதக்கங்களை வென்றிருந்ததே இதற்கு முந்தைய சாதனையாக இருந்தது. கடந்த 1956 முதல் 1964ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு நிகழ்த்தப்பட்ட லெட்டினாவின் சாதனையை, நீண்ட காலத்திற்குப் பிறகு மைக்கேல் பெல்ப்ஸ் முறியடித்தார்.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற 200 மீட்டர் மெட்லி நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் கலந்து கொண்டார். இதில் அசுர வேகத்தில் நீந்திய பெல்ப்ஸ் மீண்டும் தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம் பெல்ப்ஸின் சாதனை பயணம் தொடர்கிறது. இதுவரை மைக்கேல் பெல்ப்ஸ் 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு 16 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று மொத்தம் 20 பதக்கங்களை வென்றுள்ளார்.

இது குறித்து மைக்கேல் பெல்ப்ஸ் கூறியதாவது,

தனி வீரர் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை யாரும் எட்ட முடியாத சாதனை படிகளை கடந்திருப்பது பெருமையாக உள்ளது. ஆனால் இந்த சாதனையை எட்ட நான் கடினமான பாதைகளை கடந்து வந்துள்ளேன் என்றார்.

இந்த ஒலிம்பி்க் போட்டியுடன் ஓய்வு பெற தீர்மானித்துள்ள மைக்கேல் பெல்ப்ஸ், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இன்னும் 2 போட்டிகளில் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

Categories: News

Leave a Reply


Thara Thappattai Movie Images

Posted on அக் - 2 - 2015

0 Comment

Puli Movie Latest Images

Posted on செப் - 10 - 2015

0 Comment

Tamilnadu Animal Husbandry and...

Posted on நவ - 2 - 2015

0 Comment

Posted on ஆக - 15 - 2015

0 Comment