• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்


19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியனான அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய இளைஞர் அணி வீழ்த்தி உலகக் கிண்ணத்தைத் தனதாக்கியது.

19 வயதுக்குட்பட்டோருக்கான 8 ஆவது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றது.
டவுன்ஸ்வில்லியில் இன்று நடைபெற்ற இறுதிச்சுற்றில் 6ஆவது இடத்திலுள்ள இந்திய அணி, முதலிடத்தில் உள்ள நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவுடன் மோதியது.

இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி களத்தடுப்பைத் தெரிவு செய்தது. இதன் மூலம் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் எடுத்தது.

துடுப்பாட்டத்தில் வில்லியம் போசிசிஸ்டோ ஆட்டமிழக்காமல் 6 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்களும், ஆஸ்டன் டர்னர் 43 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 37 ஓட்டங்களும் பெற்றனர். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய அணித்தலைவர் உன்முக் சந்த் ஆட்டமிழக்காமல் 7 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் சதம் கடந்து 111 ஓட்டங்களும், பின்பு களமிறங்கிய சுமித் பட்டேல் ஆட்டமிழக்காமல் 4 பவுண்டரிகளுடன் அரைசதம் கடந்து 62 ஓட்டங்களும் எடுத்து அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இவ்விருவரும் இணைந்து 5ஆவது விக்கெட்டுக்காக 130 ஓட்டங்களைச் சேர்த்தனர். இதுவே வெற்றிக்கூட்டணியாக அமைந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக இந்திய அணித் அணித்தலைவர் உன்முக் சந்த் தெரிவு செய்யப்பட்டதோடு தொடரின் ஆட்டநாயகனாக அவுஸ்திரேலிய அணியின் வீரர் பொசிஸ்டோ தெரிவு செய்யப்பட்டார்.

Categories: News

Leave a Reply


10 Enradhukulla Teaser Release...

Posted on ஆக - 10 - 2015

0 Comment

Puli Audio Launch Photos

Posted on ஆக - 3 - 2015

0 Comment

Trisha Illana Nayanthara In...

Posted on ஜூலை - 28 - 2015

0 Comment

Thani Oruvan Releasing Today

Posted on ஆக - 28 - 2015

0 Comment

Naanum Rowdy Dhaan Posters

Posted on செப் - 19 - 2015

0 Comment