• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
 • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
 • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
 • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
 • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்

1. “ தகவல் அறியும் உரிமைச் சட்டம் ” என்பது எந்த ஒரு பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி நமக்கு தேவைப்படும் தகவலைப் அரசு அலுவலங்கள் மற்றும் அரசு உதவிபெரும் அலுவலங்களில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.

2. விண்ணப்ப மனு A4 சைஸ் பேப்பரில் கைகளால் English அல்லது தமிழில் எழுதலாம் அல்லது டைப்பிங் செய்து கொள்ளலாம், மனுவில் பத்து ரூபாய் மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப் ஒட்டி நம்முடைய விவரங்களை அதில் தெளிவாக கொடுக்க வேண்டும். குறிப்பாக சம்பந்தப்பட்ட துறையின் பொதுத்தகவல் அதிகாரியின் ( PIO ) பெயர், மனுவில் எந்த வகையான தகவல்கள் இடம் பெற வேண்டும், அதிகாரியிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் தகவல்கள் என்ன, என்ன ? , தேதி, இடம், தந்தை பெயர், இருப்பிட முகவரி, கையொப்பம், இதில் இணைக்கக்கூடிய ஆவணங்களின் பட்டியல் மற்றும் கைப்பேசி எண் , மின்னஞ்சல் முகவரி ( இவை இரண்டும் கட்டாயமில்லை ) ஆகியவைகள் இடம்பெற வேண்டும்.

3. சகோதரர்களே, மனுவில் பதியும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும். போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நம்முடைய முகவரியும் உண்மையானதாக இருக்க வேண்டும்.

4. மனுக்களை நேரிலோ அல்லது ரிஜிஸ்டர் போஸ்ட் செய்தோ அனுப்பலாம். கூரியர் மூலம் மனுவை அனுப்புவதை தவிர்க்கவும். மனுக்களை அனுப்பும் முன்பு ஜெராக்ஸ் காப்பியும் அனுப்பிய பிறகு அஞ்சல் முத்துரையுடன் கூடிய ஆதார சீட்டை பாதுகாத்துக்கொள்ளவும்.

5. வெளிநாடு வாழ் சகோதரர்கள் தங்களின் மனுக்களை தாங்கள் வசிக்கக்கூடிய அந்தந்த நாட்டில் உள்ள இந்திய தூதரக அலுவலங்களில் அதற்குண்டான முத்தரை கட்டணத்தை செலுத்தி தாக்கல் செய்யலாம்.

6. நமக்கு பொது தகவல் தொடர்பு அதிகாரிடமிருந்து கிடைக்க வேண்டிய சாதாரண தகவல்கள் 30 நாட்கள் கால அவகாசதிலும், தனி மனித வாழ்க்கை சம்பந்தப்பட்ட தகவல்களாக இருப்பின் 2 நாட்கள் கால அவகாசத்திலும் கிடைக்கும். நமது மனுக்கள் நிராகரிக்கப்பட்டால் நாம் மேல்முறையீடும் செய்துகொள்ளலாம்.

7. உரிய காலத்திற்குள் நாம் கோரிய தகவல்கள் மற்றும் தகவல்களின் நகல்கள் வேண்டும் என்றால் பக்கத்திற்கு ரூ 2 வீதம் செலுத்தவேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நமது ஊர் பொது நலன் சம்பந்தப்பட்ட என்ன என்ன கேள்விகள் சம்பந்தப்பட்ட பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து, தகவல்களை கேட்டுப்பெறலாம் ? எடுத்துக்காட்டாக:

1. நமது மாவட்ட MP அவர்களுக்கு மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 5 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

2. அதேபோல் நமது தொகுதி MLA அவர்களுக்கு மாநில அரசு ஒவ்வொரு ஆண்டும் வழங்கக்கூடிய நிதியில் ( 2 கோடி ரூபாய் ) இருந்து நமது ஊருக்கு என்ன என்ன நலத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது ?

3. நமது ஊருக்கு மத்திய அகல ரயில் பாதை திட்டத்தின் தற்போதைய நிலை என்ன ? எப்பொழுது பணிகள் நிறைவுபெறும் ?

4. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட நலத்திட்டங்களான ‘ பசுமை வீடுகள் திட்டம்’ , இந்திர நினைவு குடியிருப்பு திட்டம், தன்னிறைவு திட்டம் ( முந்தைய ஆட்சியில் ‘ நமக்கு நாமே திட்டம் ‘ ), அனைத்து பேரூராட்சி அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நபார்டு உதவியின் கீழ் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்டங்களை நமது சமுதாயத்தை சார்ந்த ஏழை எளியோர்கள் மற்றும் நமது ஊர் எந்த வகையில் பயன் பெறலாம். இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

5. மாநில அரசால் வழங்கப்படுகிற நலதிட்ட உதவிகளான உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ( தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ்இமாம்கள், அரபி ஆசிரியர்கள், மோதினார்கள், பிலால்கள், மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள், அடக்கஸ்தலங்கள், தைக்கால்கள், எத்தீம்கான இல்லங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் முஜாவர் ஆகியோர் பயன்பெற தகுதியுடையோர் ஆவார்கள் ) நலவாரியம் மூலமாக எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

6. மத்திய அரசால் வழங்கப்படுகிற மானிய தொகையின் கீழ் புனித ஹஜ் பயணம் செய்ய நமது ஊரைச்சேர்ந்த ஏழை எளியோர்கள் எவ்வாறு உதவிகள் பெறுவது ? இப்பயனை பெற யாரை அணுகுவது ? என்ன என்ன டாக்குமென்ட்கள் அதில் இடம்பெயர வேண்டும் ? யார், யாரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

7. நமது ஊரில் மின் வினியோக டிரான்ஸ்பார்மர்களில் உள்ள மின் அளவு திறன் எவ்வளவு ? இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிருக்கும் வினியோகிக்கிற மின் திறன் அளவு என்ன ? டிரான்ஸ்பார்மர்கள் மற்றும் நமது ஊரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நூண்டபட்டுள்ள போஸ்ட் மரங்கள் இவைகளின் தரம் என்ன ? பாதுகாப்பானவையா ? குடியிருப்பு பகுதியின் மேலே மின் கம்பிகள் செல்கிறதா ? இதனால் பொதுமக்களுக்கு பாதிப்பு உண்டாகுமா ?

8. நமதூரைச் சேர்ந்த நபர்கள் காவல் துறையில் கொடுக்கப்பட்ட புகாரின் மேல் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

9. நமது அரசு மருத்துவமனையின் தரம் மற்றும் சேவையை உயர்த்த யாருடைய கவனத்துக்கு கொண்டு செல்வது ?

10. மேலும் நமதூரில் உள்ள குடி நீர் தொட்டிகள் எவ்வாறு சுத்தம் செய்யப்படுகிறது ? மழை காலங்களில் ஏற்படுகிற தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க அதில் குளோரின் கலக்கப்படுகிறதா ?

11. நமதூரில் எத்தனை குளங்கள், வாய்க்கால்கள் உள்ளன ? அதில் ஏதும் தூர்வாரப்பட்டு உள்ளதா ? ஆக்கிரமிப்புகள் எதுவும் உள்ளதா ?

12. நமதூரில் புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணிகள் எப்பொழுது ஆரம்பமாகும் ? இப்பணிகள் எப்பொழுது நிறைவு பெரும் ? இப்படி நீங்களும் இதே போல் என்னற்ற பல தகவல்களை கீழ் கண்ட சம்பந்தப்பட்ட மாநில, மத்திய பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடம் இருந்து கேட்டுப்பெறலாம்.

மாநில அரசு தகவல்கள் பெற :-

திரு. எஸ். இராம கிருட்டிணன், ( இ. ஆ. ப, ஓய்வு )

மாநில தலைமை தகவல் ஆணையர், காமதேனு கூட்டுறவு பல்பொருள் அங்காடி கட்டடம், முதல் மாடி, ( வானவில் அருகில் ) பழைய எண் : 273, புதிய எண் : 378 , அண்ணா சாலை, ( தபால் பெட்டி எண் : 6405 ) தேனாம்பேட்டை, சென்னை – 600 018 தொலைப்பேசி எண் : 044 – 2435 7581 , 2435 7580 Email : sic@tn.nic.inhttp://www.tnsic.gov.in/contacts.html

மத்திய அரசு தகவல்கள் பெற :-

Shri Satyananda Mishra Chief Information Commissioner Room No.306, II Floor August Kranti Bhavan Bhikaji Cama Place New Delhi – 110 066. Phone:- 011 – 26717355 E-mail :- s.mishra@nic.inhttp://cic.gov.in/

குறிப்பு :- மனுக்களை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்தந்த தாலுக்கா அலுவலகம் ஆகியவற்றில் உள்ள பொதுத்துறை தகவல் அதிகாரிகளிடமும் தாக்கல்செய்யலாம். சகோதரர்களே ! நமது மனுக்களை நேரடியாக மாநில பொதுத்துறை தகவல் அதிகாரிகளுக்கு அனுப்புவதே சிறந்தது.

Categories: Useful Information

21 Responses so far.

 1. SARAVANA KUMAR says:

  VERY USEFUL & POWERFUL ACT FOR ALL INDIANS

  • Radha krishnan says:

   Good Information & good guideline.

   • இளவரசன்.சி says:

    வணக்கம் ஐயா,
    என் பெயர் இளவரசன் .எங்கள் ஊர் அ.பள்ளிப்பட்டி கிராமம் நான் 11-5-2016அன்று எங்கள் ஊர் வரவு செலவு கேட்டு இருந்தேன்.ஆனால் இன்று (5-7-2016)தான் என் கையில் கிடைத்தது.இதற்கான அபாரதம் மற்றும் மேல்முறையிடு யாரிடம் செய்வது என்ற எந்த தகவலும் அந்த நகல்களில் இல்லை.நகல்களுக்கு 10000 ரூபாய் கட்ட சொல்கிறார் .இதற்கான மேல்முறையிடு யாரிடம் செய்வது என்ற கூற வேண்டும்.நான் பொது தகவல் அலுவலர்/ வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டார வளர்ச்சி அலுவலகம்,பாப்பிரெட்டிப்பட்டி,தருமபுரி என்ற முகவரிக்கு அனுப்பினேன்

 2. RAMAJAYAM EGAMBARAM says:

  THANKS

 3. suresh says:

  this act is very useful to all innocent people . and very good to all

 4. S.Raj kumar says:

  Romba nandri Sir,, ithathan naanga yethirparthom..Bcoz..,Namma kaasa yar yaro sapdraga..

 5. facebookadmin says:

  Dear Admin plz sent ur contect details
  my mail – veeramani@programmer.net

 6. senthil kumar says:

  வணக்கம் சார்,

  எங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர் சரியான நேரத்திற்கு அவருடைய அலுவலகத்திற்கு வருவதில்லை. அவருடைய உதவியாளரிடம்(தலையாரி) கேட்டால்…அவருக்கு தாலுக்கா அலுவலகத்தில் இன்று வேலை வரமாட்டார் தாலுக் ஆபிஸ்க்கு சென்று பாருங்கள் என்று பதில் சொல்லி விடுகிறார்.

  தாலுக் ஆபிசுக்கு சென்றால் அவர் இன்னும் வரவில்லை. உடனடியாக பார்க்க வேண்டும் என்றால் அவருடைய கேபிள்டிவி(சுய தொழில்) அலுவலகத்திற்கு செல்லுங்கள் என பதில் வருகிறது.

  இதனால் ஊர் பொதுமக்கள் பாதிப்படைந்து வருகிறோம். வருமானத்திற்கு அதிகமாக அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் அவரிடம் உள்ளது.

  இந்த கிராம நிர்வாக அலுவலர் மீது தகவல் அறியும் உரிமைசட்டத்தின் கீழ் தகவல் பெற வழிவகை உள்ளதா?
  எவ்வாறு பெறுவது,நகல் பெற இரண்டு ரூபாய் கட்டணம் எங்கு செலுத்த வேண்டும்.

 7. MOHAMMED says:

  sir,
  i want the address of thagaval urimai ariyum sattam office in salem.
  please send address to mail id thanking you

 8. muthu says:

  how do use this
  village people

 9. Tamilselvan says:

  தகவல் அறியும் உரிமை சட்டம் தகவலுக்கு நன்றி..
  தற்பொழுது ஒரு இயற்கை மருத்துவம் தொடர்பான புத்தகம் வாசித்தேன். நூலாசிரியர் நூலில் ஒரு RTI act ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். மூன்று வினாக்களுக்கு அரசு துறை பதில் அளித்து உள்ளது. அதை எப்படி நான் பெறுவது?

 10. bharathi says:

  Dear Sir if i get our panchayth detai where i give request form

 11. lakshmi says:

  வணக்கம் சார்
  எங்கள் ஊரில் முக்கியமான சாலை மிகவும் மோசமான நிலையில் பாதிப்பு அடைந்து உள்ளது. அதை சீரமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்த சாலையில்தான் முக்கியமான வழிபாட்டு தளம் உள்ளது.மேலும் விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு செல்ல இந்த சாலையை தான் பயன்படுத்துகின்றனர். சாலை மோசமாக உள்ளதால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
  தகவல் அறியும் சட்டத்தின் கீழ் இதற்கு தகவலை பெற முடியுமா? இதை எங்கு பெறுவது யாரை அணுக வேண்டும். இதன் மூலம் பெறப்படும் தகவல் உண்மையாக இருக்குமா.

 12. Aranganathan says:

  பணி நியமனம் தொடர்பான அரசு ஆணைகளின் தகவலை தகவல் பெறுவது எப்படி?

 13. Aranganathan says:

  பணி நியமனம் தொடர்பான அரசு ஆணைகளின் தகவலை தகவல் பெறுவது எப்படி? எந்த அலுவலரிடமிருந்து தகவல்களை பெறலாம்?

 14. Selvarani .S says:

  tzf;fk;;;>
  ehd; fyg;G jpUkzk; nra;J nfhz;lts;. vdJ fy;tp jFjpapid Ntiy tha;g;G mYtyfj;jpy; fyg;G jpUkz gjpT Kiwgb gjpT nra;J cs;Nsd;. vdf;F Ntiy NjLk; KiwapidAk; gjpT Kg;G mbg;gilapy; Ntiy fpilf;Fk; KiwapidAk; vdf;F njhptpf;f Kbkh? ahiu ehLtJ vd;gJ njhpatpy;iy.

 15. parthipan says:

  குடும்ப அட்டைபெ ற எப்படி விண்ணப்பம் அனுப்ப வே ண்டும்…

 16. பாபு says:

  மார்ச்27தபால்துறை MTS தேர்வு எழுதினேன்.அதன் தேரச்சி விபரம் தெரியவில்லை…உதவ வேண்டும்

 17. Mahendiran says:

  Sir வணக்கம் நான் கிருஷ்ணகிரிமாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியை சார்ந்தவன் நான் தொட்டியநாயக்கர் mbc இனம் ஆகும்.
  எனது மனைவி ஆதி திராவிடர் இனத்தை சார்ந்தவள்ளி இப்போது எனது மகளை ஆதி திராவிடர் இனத்தில் சேர்க்க விருப்ப படுகிறோம் அவளது எதிர்கால வாழ்க்கையை கருத்தில் கொண்டு செய்யலாமா .அதற்கு என்ன செய்யவேண்டும்.

Leave a Reply


Inji Iduppazhagi Movie Images

Posted on ஆக - 15 - 2015

0 Comment

“144” Audio Launch On...

Posted on அக் - 28 - 2015

0 Comment

Indian Coast Guard (icg)...

Posted on நவ - 2 - 2015

0 Comment

Rajini Murugan Is For...

Posted on ஆக - 26 - 2015

0 Comment

Ajith and Vijay Gives...

Posted on ஜூலை - 28 - 2015

0 Comment