• ஆக : 22 : 2016 - காசோலை‬ ‪மோசடி‬ ‪‎வழக்கு‬ ‪‎தொடர‬
  • ஆக : 22 : 2016 - தமிழக‬ ‪அரசுப்‬ ‪‎பதிவேட்டில்‬ ‪‎பெயர்‬ ‪மாற்றம்‬ ‪‎செய்துகொள்வதற்கான‬ ‪‎வழிமுறைகள்‬ ‬
  • ஆக : 22 : 2016 - வாரிசுரிமையை‬ ‪சரிபார்க்காமல்‬ ‎சொத்து‬ ‪வாங்காதீர்கள்‬
  • ஆக : 22 : 2016 - ‎உங்கள்‬ ‪‎மாவட்ட‬ ‪‎ஆட்சியர்‬ ‪‎அவர்களிடம்‬ ‪ஆன்லைனில்‬ ‪புகார்‬ ‪அளிப்பதற்கு‬
  • ஆக : 21 : 2016 - தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் (கலெக்டர்) செல் எண் அலுவலக தொலைபேசி எண்கள் பேக்ஸ் எண்
மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடிசாதிக்கும் ராமநாதபுரம் விவசாயி

பதிவு செய்த நாள் : டிசம்பர் 21,2013,18:33 IST
நன்றி : தினமலர்

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டம் சின்ன அக்கிரமேசியில் “மாப்பிள்ளை சம்பா’ நெல் சாகுபடி செய்து விவசாயி ஒருவர், சத்தமில்லாமல் சாதனை படைத்து வருகிறார்.

வறட்சியை தாங்கி விளையக்கூடிய “மாப்பிள்ளை சம்பா’ என்னும் நெல் ரகம், ஏழு அடி உயரத்தில் வளரக்கூடியது. அதிகளவு மாவு சத்து காணப்படுவதால், சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ரக அரிசி மிகவும் பிடிக்கும். இந்த அரிசியில் சமைக்கப்படும் சாப்பாடு எளிதில் கெட்டுப்போகாது. ஏக்கருக்கு 40 முதல் 50 மூடைகள் வரை சாகுபடி கிடைக்கும். சிறப்பு வாய்ந்த இந்த நெல் ரகத்தை, ராமாநாதபுரம் அருகே சின்ன அக்கிரமேசி விவசாயி கிருஷ்ணன், 62, சாகுபடி செய்து சாதித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய அறிவுரைபடி, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஒரு ஏக்கரில் “மாப்பிள்ளை சம்பா’ சாகுபடி செய்தேன். அவ்வப்போது, விட்டு விட்டு பெய்யும் மழையில், தற்போது ஆறரை அடி உயரம் வரை பயிர் வளர்ந்து, நெல் மணிகள் கொத்து…கொத்தாக தொங்குகின்றன. பூச்சி தாக்குதல் இல்லை. உரச் செலவும் கிடையாது. மற்ற பயிர்கள் எல்லாம், மழை இன்றி வாடும் நிலையில், இந்த ரகம் மட்டும் பச்சை பசேல் என, வளர்ந்துள்ளது.

மகசூல் பருவத்தை எட்டியுள்ளதால், தைப்பொங்கலையொட்டி அறுவடை செய்யவுள்ளேன். பழமையான இந்த நெல் ரகத்திற்கு, தற்போதும் மவுசு இருப்பதால், இந்த ரகத்தை விரும்பி சாகுபடி செய்தேன், என்றார்.

மேலும் பல நல்ல இயற்கை விவசாயம் சார்ந்த செய்திகளுக்கு https://www.facebook.com/pages/Dr-G-Nammalvar-Organic-Agriculturist/197789246939878

Leave a Reply


Power Grid Corporation Of...

Posted on ஆக - 22 - 2015

0 Comment

10Endrathukulla‬ From October 21st

Posted on அக் - 14 - 2015

0 Comment

Election alliance special

Posted on பிப் - 20 - 2016

0 Comment

Puli Audio Launch Photos

Posted on ஆக - 3 - 2015

0 Comment

‎Thani Oruvan‬ Reaches 50th...

Posted on அக் - 16 - 2015

0 Comment